டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கடந்த 18-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை மற்றும் கோரிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் அபிஜித் தீப்கே. அபிஜித் தீப்கே"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; என் பிள்ளைகள் 'இவர்களைப்' போல வளர வேண்டும்" - ஜோதிகா பதிவு "உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, கடந்த சில நாட்களாக எனக்கு உடம்பு சரியில்லை. ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். தினமும் காலையிலும் மாலையிலும் IV போடுகிறார்கள். ஆனால், நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்தக் 'கரப்பான் பூச்சிகள்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் சேர்ந்து இந்தப் போராட்டத்தைப் மாபெரும் வெற்றியாக்கியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியும், இந்தப் போராட்டத்தை இந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ததற்கு வாழ்த்துகளும். நாம் தொடர்ந்து இதேபோல் அமைதியான வழியில் போராடினால், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நிச்சயம் நடக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மிக்க நன்றி!" "வெற்றிமாறன் சாரும் ஜோக்கரா?" - பாலன் இல்லத்தில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றம்! பேசியது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/abhijit-dipke-diagnosed-with-typhoid-amid-jantar-mantar-fast




