சேலம், அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார். சேலத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. ராமதாஸை ஏற்ற பாஜகவினர் அன்புமணியை ஏற்க தயாராக இல்லை. அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளபோவதில்லை. எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7-ம் முறை எம்.எல்.ஏ ஆக்கியவர் ராமதாஸ். சோதனையான சூழலில் அன்புமணிக்காக என் உயிரை பணயம் வைத்தேன். திமுக, அதிமுகவில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. விரைவில் எனது முடிவை அறிவிப்பேன். பிரிந்திருந்த ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேர்ந்த நிலையில் அருள் இவ்வாறு அறிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-will-not-accept-anbumani-as-its-leader-arul-interview




