சனா, மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன். இந்நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. இந்த போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை கைப்பற்ற ஏமன் அரசுப்படையினர் முயற்சித்து வருகின்றனர். அதேவேளை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி, இஸ்ரேல் போன்ற நாடுகள் மீதும் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 27 பேர் பலி இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் தைஸ் மாகாணத்தில் அரசுப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/yemen-27-houthi-rebels-killed-in-government-forces-attack




