‘டோரதி’ திரைப்படத்தில் இளையராஜா அவர்களின் இசை உங்களை மிரளவைக்கும் என்று தனுஷ் பாராட்டிள்ளார். 10-வது படத்தில் புதிய கூட்டணி 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக முழு படத்திற்கு இளையராஜா இசை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில், தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘டோரதி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் இந்தப் படத்தைப் பாராட்டி இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி, நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், “டோரதி - கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ். இது துணிச்சலான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு படம். இதில் ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை உங்களை மிரளவைக்கும். இது அவரது 'ருத்ரதாண்டவம்' என்றே சொல்லலாம். நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில், என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanush-praises-karthik-subbarajs-dorothy-film




