உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே கேட்டுக்கு நடுவே அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நடுவழியில் நின்ற பேருந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ரெயில்வே கேட்டை பேருந்து கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் நடுவே திடீரென பழுதாகி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. கொல்லம் எக்ஸ்பிரஸ் அந்த சமயம், அதே தடத்தில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் நேரம் ஆகும். தூரத்தில் ரயில் வரும் சத்தமும், ஹாரன் ஒலியும் கேட்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரெயில்வே கேட் கீப்பர், உடனடியாக பேருந்தை அப்புறப்படுத்துமாறு சத்தமிட்டார். பயணிகள் ரெயில் நெருங்கி வருவதை உணர்ந்ததும், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடினர். இதனால் அங்கு பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. ரெயில் வருவதற்கு சில நொடிகள் மட்டுமே இருந்த விறுவிறுப்பான சூழ்நிலையில், ஓட்டுநர் தனது சாதுரியத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தை ஸ்டார்ட் செய்தார். பின்னர் பஸ் தண்டவாளத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தை அதிவேகமாக கடந்து சென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-government-bus-breaks-down-on-rail-track-as-express-train-approaches




