புதுடெல்லி, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் 7 மடங்கு உயர்ந்துள்ளது. 2021-ல் வெறும் 15 ஆக பதிவான தாக்குதல் சம்பவங்கள் 2025-ல் 104 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 33, ஐக்கிய அரபு அமீரகத்தில் 32, இங்கிலாந்தில் 31, கனடாவில் 30 தாக்குதல் சம்பவங்கள் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/attacks-on-non-resident-indians-nris-have-increased-over-the-past-five-years-central-government




