லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேரில் கண்டு ரசித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/dhoni-watching-the-india-england-match-in-person




