திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சுத்தி காலடிபட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27 வயது). ஆட்டோ டிரைவர். இவரும் ஆத்தூர் அருகே உள்ள கூலம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா (22 வயது) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது பவித்ரா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அஜித்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை மிரட்ட பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார் தனது மனைவியை காப்பாற்றுவதற்கு, அவரும் கிணற்றில் குதித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்த அஜித்குமார் மற்றும் அவரது மனைவியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/pregnant-wife-jumps-into-well-in-family-dispute-husband-dies-trying-to-save-her




