சென்னை, அசாமில் இருந்து தமிழக கோவில்களுக்கு 5 யானைகள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி துர்கா, ஹிராலால், சிவா, ரூப்சிங் மற்றும் பிஜூலி ஆகிய 5 யானைகளை அசாமில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் கேட்டபோது, யானைகளின் உரிமையாளர் மற்றும் பிற ஆவணங்கள் போன்றவை அசாம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், யானைகளை இடமாற்றம் செய்வதற்கான 2024-ம் ஆண்டு விதிகளின்படி இந்த இடமாற்றம் நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஆனால் அதிலும் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. துர்கா என்ற 5 வயது யானைக்கான ஆய்வு மற்றும் இடமாற்றம் குறித்த பரிந்துரை, ஒரே நாளில் முடிக்கப்பட்டது குறித்து எல்சா அறக்கட்டளையை சேர்ந்த பிரகாஷ் சாஷா கேள்வி எழுப்பியுள் ளார். செப்டம்பர் 4-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆய்வு தொடங்கப்பட்டு, அதே நாள் இரவு 9 மணிக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் துர்கா யானை 3 ஆயிரம் கி.மீ. பயணத்தை மேற்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று வரவுள்ளதாக தெரிகிறது. இது அசாம் மாநிலத்தை சேர்ந்த புன்யா பெகு என்பவருக்கு சொந்தமான யானையாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/5-elephants-for-tamil-nadu-temples-being-brought-from-assam




