சென்னை, கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபாரமான திறமையாலும், தளராத தன்னம்பிக்கையாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். தங்களது விடாமுயற்சியின் மூலம் அடுத்தடுத்த சாதனைகளால் தேசமே பெருமை கொள்கிறது. தாங்கள் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து தேசத்திற்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/praggnanandhaa-grand-chess-tour-champion-ttv-dhinakaran-vanathi-srinivasan-congratulate




