சென்னை, சபாநாயகர் தேநீர் விருந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. ஒவ்வொரு கூட்டத்தொ டரின் நிறைவிலும் இரு அவைகளின் தலைவர்களும் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று மக்களவை முடிவடைந்த தும், சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. ஆனால் அதில் ஒரு அங்கம் வகித்த தி.மு.க., நேற்றைய சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங் கேற்றது. நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்பி. இந்த விருந்தில் பங்கேற்றார். ஆனால் உடனடியாக அவர் சென்னை திரும்பியதால் விருந்து நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அங்கிருந்து புறப்பட்டார். திமுக - பாஜக கூட்டணி பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தியது. இந்த நிலையில், சபாநாயகர் தேநீர் விருந்து குறித்து விசிக முதன்மை செயலாளர் ஆளுர் ஷா நவாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- “மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்தை தமிழக முதல்-அமைச்சர் விஜய் புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-aaloor-sha-navas-asks




