தூத்துக்குடி, தூத்துக்குடியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் மரணம் தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற வாலிபரின் லாக்-அப் மரணத்திற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அனைத்து போலீசார் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வழக்கை தீவிரமாக விசாரித்து உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் நிவாரணம் உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-protests-in-thoothukudi-demanding-justice-for-arunachalams-death




