லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 11 வைடு இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் 26 எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கினர். குறிப்பாக இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மட்டும் 11 வைடு பந்துகளை வீசினார். 27 ரன்கள் வித்தியாசத்தில் இதையடுத்து 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 26 எக்ஸ்ட்ரா இப்போட்டியில் இந்திய அணி வழங்கிய 26 எக்ஸ்ட்ரா ரன்களே, தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/victory-lost-due-to-26-extra-runs-prince-yadav-bowled-11-wides-indian-fans-left-heartbroken




