கடையநல்லூர், தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் அருகே கரிசல்குடியிருப்பில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 1,000-க்கும் மேற்பட்ட வளையல் மாலைகளால் அம்மனுக்கு பிரம்மாண்டமான வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கரிசல்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலன், திருமண பாக்கியம், குழந்தைப்பேறு உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவின் நிறைவில் பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டதுடன், 9 வகையான உணவுகள் அடங்கிய சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/aadi-pooram-valaikappu-ritual-at-kaliyamman-temple-near-achanpudur




