தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026-27-ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வமுள்ளோர் "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்" செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு கோழிக்கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். முன்னுரிமை பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடந்த 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டு திட்டத்தின் பயனாளியாக பயன டைந்திருக்கக் கூடாது. பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராம ரிக்க உறுதி அளிக்க வேண்டும். திட்டத்தில் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி /கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க ஒப்புதல் பெற வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்துக்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதாரம், சான்றுகளை அளிக்கவேண்டும். விண்ணப்பிக்கலாம் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அரசு நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பெற்றிருப்பின் தங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்துக்கு சென்று கால்நடை உதவி மருத்துவரை அணுகி, விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/50-subsidy-for-setting-up-a-poultry-farm




