சென்னை, தமிழகத்தில் 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம் - போடிநாயக்கனூர் தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06059) செப்டம்பர் 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி வரை 7 சேவைகளும், போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06060) செப்டம்பர் 13-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை 7 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06045) செப்டம்பர் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 25-ந்தேதி வரை 4 சேவைகளும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06046) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. மங்களூரு சென்டிரல் - சென்னை எழும்பூர் மேலும், மங்களூரு சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06126) செப்டம்பர் 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந்தேதி வரை 8 சேவைகளும், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கு செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06125) செப்டம்பர் 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரை 8 சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன. போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் போத்தனூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06028) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06027) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இதேபோல், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06030) செப்டம்பர் 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 13 சேவைகளும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06029) செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 13 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. நெல்லை - தாம்பரம் (ஞாயிற்றுக்கிழமை) மேலும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06166) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06165) செப்டம்பர் 7-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. நெல்லை - தாம்பரம் (வியாழக்கிழமை) இதேபோல், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06070) செப்டம்பர் 3-ந்தேதி முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை 9 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069) செப்டம்பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 30-ந்தேதி வரை 9 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த 14 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-service-of-14-special-trains-further-extended




