இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோரின் 4-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஜயா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். நடிகை, தயாரிப்பாளர் என கலக்கும் நயன்தாரா சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் சினிமா மீது கொண்ட தீவிர ஆர்வத்தில் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், மலையாள, கன்னட சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் மற்றும் டாக்ஸிக் திரைப்படங்கள், பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றே கூறப்படுகிறது. இவர், தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் View this post on Instagram ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல், எல்ஐகே திரைப்படங்களை இயக்கியுள்ளார். மகன்களின் 4வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் விக்னேஷ் சிவன் நயன்தாரா மகன்களின் 4வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருந்தார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் உயிர், உலகிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vignesh-shivan-nayanthara-celebrate-sons-4th-birthday




