இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்தார். விஜய் ஜோடியாக அவர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. "சினிமா என்பது புதைமணல் போன்றது. இங்கு கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிவிடுவோம். அந்த புதைமணலில் சிக்கினால் சிதைந்து போவோம். எனவே தான் போட்டியிருந்தாலும், பொறாமை இல்லாமல் பயணிக்க வேண்டும். சினிமாவில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். இங்கு சாதித்த எல்லோருக்கும் மோசமான விஷயங்கள் கடந்த காலத்தில் இருந்திருக்கும். ஏனெனில் இங்கு அவமானங்கள் இல்லாமல் வெற்றிகள் சாத்தியம் கிடையாது” என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/even-with-competition-we-must-travel-without-jealousy-pooja-hegde




