சென்னை, தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின், வழிகாட்டி மதிப்புகள்(Guideline Value) ஒட்டு மொத்த மொத்த அளவில் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக நிதிநிலை குறித்து, சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது, நில வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளால், வருவாய் கிடைப்பதில் கசிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பத்திரப்பதிவில் வருவாய் கசிவு ஏற்படும் வழிகளை சரிசெய்ய, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனால், நில வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு அறிக்கை அளிக்க, சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “தமிழக அரசின் உத்தரவுப்படி, வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்கான பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கிராம வாரியாக தற்போதைய மதிப்பு, உயர்த்தப்பட வேண்டிய புதிய மதிப்பு விவரங்கள், பட்டியல் வடிவில் பெறப்படுகின்றன. இதன்படி, நகர்ப்புற வளர்ச்சி அடிப்படையில் மாநகராட்சிகளில், 60 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்தபடியாக நகராட்சிகள், பேரூராட்சிகளில் அவை அமைந்துள்ள பகுதிகளின் தன்மை அடிப்படையில், 50 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற வளர்ச்சி தாக்கம் இல்லாத ஊரக பகுதிகளில், 30 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகள் திருத்தப்பட உள்ளன. அத்துடன் விவசாய நிலங்களின் குறைந்தபட்ச விலை மதிப்பு தற்போது, 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதை, 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான பரிந்துரையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் தற்போது பத்திரப்பதிவு வருவாய் இலக்கு, 35,000 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/preparation-of-village-wise-list-to-hike-guideline-values-by-up-to-60-move-to-boost-registration-revenue




