தஞ்சை, தஞ்சை மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச.வின் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தலைவர் சேவியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கமலநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகின்ற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது. ஆன்லைன் மது விற்பனை மேலும் மதுபான சில்லறை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும். மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசின் கொள்கை முடிவில் மூடப்படும் மதுபான கடை பணியாளர்களுக்கு அரசின் இதர துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். காலி மதுபான பாட்டில்கள் திரும்பப்பெறும் பணியை தனியார் முகமை மூலம் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலி அட்டை பெட்டிகளுக்கு 50 சதவீத கழிவு வழங்க வேண்டும். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களுக்கு மதுபானக்கடை பணியாளர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கும்பகோணம் பகுதி செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-lpf-urges-abandoning-the-online-liquor-sales-scheme




