சென்னை, த.வெ.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலை உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நின்னா கைது, நடந்தா கைது, பேசுனா கைது இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கறிஞரின் பணி மிக அவசியமானதாக இருக்கிறது. கடந்த 100 நாட்களில் Busy-ஆக இருப்பது வழக்கறிஞர் அணி தான். தவெக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலை உள்ளது. ஏனென்றால் நின்னா கைது, நடந்தா கைது, பேசுனா கைது, சமூக ஊடகங்களில் போஸ்ட் போட்டா கைது என ஒரு மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது. அந்தளவுக்கு இந்த அரசுக்கு In-Security ரொம்ப அதிகம். தூங்கி எழுந்தா இன்னைக்கு யாரை கைது செய்ய வேண்டும்? என Time Table போட்டு கைது செய்து வருகிறது தோல்விக்கு பிறகு ஜென் z இளைஞர்களை எழுப்பி விட்டுள்ளோம். ஜென் z இளைஞர்களையும் டார்கெட் செய்து கைது செய்கிறார்கள். கோவை கல்லூரி மாணவர் கொலை முதல்-அமைச்சரையே சிறைக்கு அனுப்பியது திமுக சட்டத்துறை. தவெக அரசு கைது செய்தபோதே திமுக வழக்கறிஞர் அணி சட்டப்போராட்டம் நடத்தியது. சோர்ந்து போயிருந்த நாம் அரசின் கைது நடவடிக்கை மூலம் மீண்டு வந்துள்ளோம். சீட்டுக்கட்டுல 52ம் ஜோக்கர். அடைமொழி வெச்சி கூப்பிட்டாதான் அமைச்சர்கள் யார்னு தெரியுது. யார் எந்த துறை அமைச்சர்னு. முதல்-அமைச்சருக்கே தெரியாது. கோவை கல்லூரி மாணவர் அமுதனின் கொலையை கோஷ்டி பூசல் என தவெக அமைச்சர் சொல்கிறார். 10 பேருக்கும் 10 பேருக்கும் தகராறு நடந்தால் அதுக்கு பெயர் கோஷ்டி பூசல். ஆனால், 10 பேர் சேர்ந்து ஒரு பையனை அடிச்சா அதுக்கு பெயர் கொலை. அது என்ன கோஷ்டி பூசலா? கொலை செய்யப்பட்ட மாணவருக்கு திமுக நிச்சயம் நீதி வாங்கிக் கொடுக்கும். காவிரியில் தண்ணி வரவேண்டும் டம்மி முதலமைச்சர், வெட்கம்கெட்ட அரசு, கேடுகெட்ட அரசு, எதற்கும் துப்பில்லை, தைரியம் இல்லை, விவசாயிகளை நடுரோட்டில் விட்டுவிட்டீர்கள் என இதையெல்லாம் சொன்னேன். இதற்குத்தான் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு எந்த ரியாக்சனும் இல்லை. இறுதியாக காவிரியில் தண்ணி வரவேண்டும் என சொன்னதற்காக கைதானேன். ஜாலியா TRIP போற மாதிரிதான் போனோம். அரசே செலவு செய்து இலவசமாக ‘ரோடு ஷோ’ நடத்தி காட்டினார்கள் இவ்வாறு அவர் கூறினார். தீர்மானம் இதனிடையே மேகதாது விவகாரம், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் நடந்த திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை மாணவர் கொலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-too-thought-that-was-the-reason-i-was-being-arrested-udhayanidhi-stalins-remarks




