மோகன்லால் மற்றும் இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் 'தொடரும்' திரைப்படம் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி மீண்டும் இணைந்தது. அந்தப் படத்திற்கு 'அதிமனோஹரம்' எனத் தலைப்பிட்டிருந்தார்கள். இப்படத்தின் சில காட்சிகளைச் சபரிமலையில் எடுக்கப் படக்குழு திட்டமிட்டிருந்தது. நடிகர் மோகன்லால் ஆனால், அந்தப் படப்பிடிப்பிற்குத் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானப் பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 'புலிகள் காப்பக' எல்லைக்குள் வருவதால், அங்குப் படப்பிடிப்பு நடத்த வனத்துறையின் அனுமதி தேவையாம். ஆனால், வனத்துறை படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. முன்னதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சில நிபந்தனைகளுடன் சபரிமலையில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருந்தது. அதற்காக படத்தின் முழு கதையையும் சமர்ப்பிக்க வேண்டும், பக்தர்கள் மற்றும் கோயில் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் எந்தக் காட்சியும் இருக்கக் கூடாது, ரூ.50,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் மோகன்லால் ஆனால், கடும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் படப்பிடிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இப்போது சன்னிதானத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டாலும், 'பம்பை' வரை படப்பிடிப்பு நடத்தப் படக்குழுவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலுடன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/mollywood/mohanlal-athimanoharam-sabarimala-shoot-permission-denied




