மும்பை, அமெரிக்கா, ஈரான் மோதலால் கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. சரிவில் இருந்த பங்குச்சந்தை மெல்ல மீண்டு வந்தது. ஆனால், இந்திய பங்குச்சந்தை இன்று (08-07-2026 - புதன்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பால் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு அதன்படி, 499 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 896 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 337 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 887 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 630 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 355 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 626 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 567 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 213 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 420 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 510 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 307 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/today-stock-market-news-tamil-on-08-07-2026




