சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. காலதாமதம் இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தடை நீங்கியது இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கான தடை நீங்கி இருக்கிறது. இதன் காரணமாக விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர். சி.பி.ஐ. விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.ஐ. விசாரணை தீவிரமடையும் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-to-investigate-armstrong-murder-case-soon




