ஜார்ஜியா அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் பலருடன் ஆசிரியை பாலியல் உறவு வைத்த நிலையில், பதிலுக்கு வீடியோவை வைத்து மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் உயிரியியல் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் மேரீஸ் நிக்கோல்ஸ் (வயது 25). பள்ளியில் கால்பந்து அணியின் மேலாளராகவும் பதவி வகித்து வருகிறார். பள்ளி வகுப்பறை இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பலருடன் பாலியல் உறவு வைத்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. நிகோல்சுக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி பள்ளியின் வகுப்பறையிலேயே மாணவர் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துள்ளார். மே 2-ந்தேதி வாகனம் ஒன்றில் அதே மாணவருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அடுத்த நாள் வேறொரு மாணவருடன் பாலியல் உறவு வைத்துள்ளார். இதேபோன்று பல மாணவர்களிடம் அவர் தகாத உறவில் ஈடுபட்டு உள்ளார். அவர்களுக்கு அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். ஆபாச வீடியோக்கள் இந்த நிலையில், அவர் ஒன்லிபேன்ஸ் எனப்படும் வலைதள கணக்கில் இணைந்துள்ளார். இதில், சமையல், உடற்பயிற்சி, இசை தொடர்பான விசயங்களை பகிர்வதுடன், படங்கள், வீடியோக்களும் பதிவேற்றப்படும். வாடிக்கையாளர்கள் அதில் பணம் செலுத்தி, அந்த நபருடன் உரையாடவும் முடியும். சில சமயங்களில் அதில் ஆபாச படங்களும் பகிரப்படும். இதனை அறிந்து கொண்ட மாணவர்கள், அவருடைய ஆபாச வீடியோக்களை அதில் வெளியிட்டு விடுவோம் என ஆசிரியை நிகோல்சை மிரட்டியுள்ளனர். தங்களுடைய பாடங்களுக்கு நல்ல மதிப்பெண்கள் வழங்கும்படி கூறி அவரை மிரட்டி வந்துள்ளார். வழக்கு விசாரணை இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரிந்து, போலீசாருக்கு புகாராக சென்றது. இவருக்கு மகள் இருக்கிறார். வழக்கு விசாரணையில், மகளை தவிர, அவர் வேறு மைனர் சிறுவர் சிறுமிகள் யாருடனும் எந்த தொடர்பும் வைக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனினும், அவருடைய 17 வயது சகோதரனுடன் தொடர்பு கொள்ள விலக்கு அளிக்க அனுமதிக்கும்படி நிகோல்சின் வழக்கறிஞர் கோர்ட்டில் கேட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/teacher-had-sex-with-school-students-students-take-action-in-response-by-posting-a-video




