தஞ்சாவூர், தஞ்சாவூர் சாலை மறியல் போது இளைஞரை விசிகவினரும், காவல் துறையும் தாக்கியது கண்டிக்கதக்கது என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தஞ்சாவூர் மாநகராட்சியில் தங்களுடைய விளம்பர பேனர்களை அரசு தரப்பில் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக கண்டனம் தெரிவித்து விசிகவினர் சாலை மறியலில் திடீரென்று ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த சாலையில் அவசர வேலையாக சென்று கொண்டிருந்த ஆகாஷ் என்ற இளைஞனை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினர் தாக்க ஆரம்பிக்கிறார்கள். காவல்துறை அதிகாரி அங்கு வந்த காவல்துறை விசிகவினரை பார்த்து நீங்கள் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆளுங்கட்சியாக இருக்கின்ற விசிகவினருக்கு ஆதரவாக நின்று அந்த அப்பாவி இளைஞனை அடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்று சொன்னால் காவல்துறை விசிகவினரை பார்த்து “நீங்கள் அடித்தால் அது குற்றம் நாங்கள் அடித்தால் அது சட்டம்" என்று சொல்லியது போல இருந்தது. தன்மானம் உள்ள ஆகாஷ் தொடர்ந்து போராடி பார்க்கிறார் ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி ஓங்கி கன்னத்தில் அடிக்கிறார். ஒரு இளைஞனாக கோபம் வந்ததால் திருப்பி அறைந்திருக்கிறார். தற்போது திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி ஆகாஷை போகாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு கிடையாது. கண்டனம் பேசிக் கொண்டிருந்த போது கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரி மீது வழக்கு கிடையாது ஆனால் விசிகவினரால் தடுத்து தாக்கப்பட்டு தொடர்ந்து காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான ஆகாஷ் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. முழுமையான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு விட்டது. அனைத்து தரப்பின் மீது வழக்கு போட்டு விசாரிப்பது தான் ஜனநாயகமாக இருக்கும். காவல்துறை உயர் அதிகாரிகள் சார்பு இல்லாத ஒரு விசாரணையை நடத்தி தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-road-blockade-the-assault-on-the-young-man-by-vck-members-and-the-police-is-condemnable-er-eswaran




