பெங்களூரு, தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைதானபோது நடந்தது என்ன என்பதை அவரது தரப்பு அறிந்து கொள்ள வாய்ப்பாக வீடியோ காட்சிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை ரன்யா ராவ் கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் ரன்யா ராவ். கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்தபோது தேவனஹள்ளியில் உள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது நடிகை ரன்யா ராவ், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேமரா காட்சிகளை வழங்க மனுதாக்கல் இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டபோது விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தங்களுக்கு வழங்குமாறு, ரன்யா ராவின் வக்கீல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை வழங்க நீதிபதிகளும் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால் ரன்யா ராவின் தரப்பில் மீண்டும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்க மனுதாக்கல் செய்யப்பட்டது. முடித்து வைப்பு இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் விசாரித்தார். விமான நிலையம் சார்பில் மத்திய அரசு வக்கீல், ஆஜராகி முந்தைய உத்தரவை விமான நிலைய உயர் அதிகாரிகள் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால் 2 நாட்களுக்கு பிறகு விமான நிலைய அலுவலகத்தை அணுகினால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெற்றுக்கொள் ளலாம் என்று கூறினார். 2 நாட்களுக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகை ரன்யா ராவின் வக்கீலிடம் அவர்கள் கூறியவாறு 2 நாட்களுக்கு பிறகு தேவையான கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/what-happened-when-ranya-rao-was-arrested-court-grants-permission-to-obtain-cctv-footage




