சென்னை, டாக்ஸிக் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, நடிகை நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டதைப்போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. சில நேரங்களில் சில விஷயங்கள் நாமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிடும். அதேபோலத்தான் தற்போது நடிகை நயன்தாரா திருப்பதியில் மொட்டை தலையுடன் சாமி தரிசனம் செய்தது வைரலாகி வருவது. டாக்ஸிக் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா இதுபோல செய்ததாக கூறி வந்த நிலையில் இது குறித்த உண்மை வெளியாகி இருக்கிறது. உண்மை என்னவென்றால் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாக பரவும் இந்த போட்டோக்கள் உண்மையானவை இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதி சென்று இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வேற லெவலுக்கு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய தலைமுடியை மட்டும் காணாமல் செய்து மொட்டை அடித்தது போல ஏஐ வைத்து மாற்றி இருக்கிறார்கள். அதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் போட்டோவை பார்க்கும் போது நயன்தாரா முகமும், அவருடைய உடையும் அப்படியே ஒரிஜினல் போல இருக்கிறது. அதனால்தான் பலரும் முதல் பார்வையில் இது உண்மையான புகைப்படம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் முடியை மட்டும் பார்த்தால் அது ஏஐ வேலை என்பது தெளிவாக தெரிகிறது. சோசியல் மீடியாவில் சிலர் டாக்ஸிக் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படி வேண்டுதல் வைத்து இருக்கலாம் என பேசி வருகிறார்கள். டாக்ஸிக் படத்தை மோகன் தாஸ் இயக்கி இருக்கிறார். கியாரா அத்வானி, ஹியுமா குரோஸி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தில் யாஷ்ஷின் சகோதரி கேரக்டரில் நயன்தாரா நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,. மேலும் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூட்டி உள்ளது. இதற்கிடையே நயன்தாராவின் மொட்டை புகைப்படம் வேற லெவலில் டிரெண்டாகிவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/did-nayanthara-shave-her-head-for-the-movie-toxic-whats-the-truth




