இட்டாநகர், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் நாட்டினர் 5 பேரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் இருந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முடியும். 5 பேர் கைது இந்நிலையில், மியான்மரில் இருந்து அருணாச்சலபிரதேச மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பேரை பாதுகாப்புப்படையினர் நேற்று கைது செய்தனர். அம்மாநிலத்தின் சங்லங் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மியான்மரில் செயல்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/5-myanmar-nationals-arrested-in-arunachal-amid-crackdown-on-drug-trade




