சென்னை, தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணிப்பது முற்றிலும் முறையற்றது" என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அப்போது அவர் கூறியதாவது:- மாநில நலனில் அக்கறை இல்லை தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உரிமை மற்றும் மாநில நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்சனையாகும். இத்தகைய முக்கியமான கூட்டத்தில் பங்கேற்காமல் திமுகவும், அதிமுகவும் புறக்கணிப்பது முறையல்ல. இதன் மூலம் அவர்களுக்கு மாநில நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுகவின் இரட்டை வேடம் நாங்கள் ஆரம்பம் முதலே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு எப்போதுமே இரட்டை நிலைப்பாடு கிடையாது. ஆனால், ஆரம்பத்தில் இந்த வரைவு நகல்களை எரித்து நாடகமாடிய திமுகவினர், இப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச தைரியமில்லாமல் பதுங்குவது ஏன்? பிரச்சனை தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தை கையில் எடுத்து திமுகவினர் சுயநல அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அரசின் இந்த ஆக்கப்பூர்வமான கூட்டத்தை கொச்சைப்படுத்தவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவுமே கனிமொழி எம்.பி முயல்கிறார். காவிரி விவகாரத்தை யாராலும் திசை திருப்ப முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-boycott-of-all-party-mps-meet-improper-says-minister-rajmohan




