டோக்கியோ, ஜப்பான் பாரா சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோ வில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி சுற்றில் (எஸ்.எல்.3 பிரிவு) 6 முறை உலக சாம்பிய னான இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-8 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத் தில் பிரமோத் பகத்- சுகந்த் கதம் ஜோடி 5-21, 15-21 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் ஹிக்மத் ரம்தானி- பிரெடி செட்டியவான் இணையிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. என்றாலும் 33 வயதான மராட்டியத்தை சேர்ந்த சுகந்த் கதமுக்கு தனது 12 ஆண்டுகால பேட்மிண்டன் வாழ்க்கையில் பெற்ற 100-வது பதக்கமாக இது அமைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/japan-para-badminton-double-medal-for-pramod-bhagat




