மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:- சம்பா சாகுபடியை டெல்டா விவசாயிகள் தொடங்குவதற்கு மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மாத வாரியாக திறந்துவிடப்பட வேண்டிய தமிழக உரிமையான நீர் வரவில்லை. தமிழகத்தின் உரிமை நீரை பெறக்கூடிய வகையில் தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தண்ணீரை பெறவேண்டும். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் தன்னிடம் 3 கோப்புகள் இருப்பதாக கூறுகிறார். கையில் இருக்கும் கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல கூறும் விதம் சரியானதல்ல. சவுதியில் இறந்த சீர்காழி மீனவர்களின் உடலை தாமதமின்றி சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-chief-minister-vijay-to-speak-in-a-manner-that-intimidates-opposition-parties-shanmugam




