Article complet
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சரவணகுமார்(35) என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி (40) என்பவருக்கும் இடையே மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணகுமாரை சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கியுள்ளார் தங்கபாண்டி. இதில் சரவணகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட தமிழ் செல்வன் இதுபோன்று ஈத்தாமொழி காவல்நிலைய எல்லையிலும் மதுபோதையில் கல்லால் தாக்கி இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லிங்கசாமி(48). அதே பகுதியை சேர்ந்தவர் சிங்கம்(60). இருவரும் நண்பர்கள் நேற்று இரவு இருவரும் மது அருந்திய போது அவர்களுடன் சிலர் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராற்றில் உடன் இருந்த இருவர் லிங்கசாமி மற்றும் சிங்கத்தை கல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று காலை இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தக் கொலையைச் செய்தது தமிழ்செல்வன் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுபோதையில் ஒரே நாளில் மூன்றுபேர் கல்லால் அடித்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous




