கிளாஸ்கோ, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை சுற்று (Round of 16) போட்டியில், இந்தியாவின் ஜடுமணி சிங் மண்டேங்பாம், பாகிஸ்தானின் சுமாமா ரெஹ்மானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அபார வெற்றி 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 123 பேர் கொண்ட படை அனுப்பப்பட்டுள்ளது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டியில் இந்தியாவின் ஜடுமணி சிங், பாகிஸ்தான் வீரர் சுமனா ரஹ்மானை எடிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜடுமணி சிங், ரவுண்ட் ஆப் 32 சுற்று போட்டியில் ஸ்காட்லாந்தின் ஆரோன் கல்லனை வீழ்த்தியபோது காட்டிய அதே வேகத்தை பாகிஸ்தான் வீரருக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தார். இதனால் ஜடுமணியின் வேகமான ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சுமாமா ரஹ்மான் தோல்வியை தழுவினார். பதக்க நம்பிக்கையை தக்கவைத்த இந்தியா இந்த வெற்றியின் மூலம் ஜடுமணி சிங் காலிறுதிக்கு முன்னேறியதுடன், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பும் தொடர்ந்து நீடிக்கிறது. காலிறுதியிலும் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை உறுதி செய்வார் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/jadumani-singh-storms-into-boxing-quarter-finals




