புதுடெல்லி, இந்தியாவில் கல்விச் சீர்திருத்தம் வேண்டி ஜென்-சி தலைமுறை இளைஞர்கள் நடத்திய 'காக்ரோச் ஜனதா கட்சி' போராட்டமும், அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய இளைஞர்களின் இந்த அதிரடி ஒற்றுமை அண்டை நாடான பாகிஸ்தான் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. ஒற்றுமை பாராட்டு சாதி, மத எல்லைகளை கடந்து இந்திய மாணவர்கள் காட்டிய அசாத்திய ஒற்றுமையை பாகிஸ்தான் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்கள் மூலம் இந்திய இளைஞர்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுத்த விதம் பாகிஸ்தானியர்களை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானிலும் புதிய காக்ரோச் இந்திய போராட்டத்தின் தாக்கத்தால், பாகிஸ்தான் இளைஞர்கள் அதே பாணியில் 'காக்ரோச் அவாமி கட்சி' மற்றும் 'காக்ரோச் அவாமி லீக்' போன்ற நையாண்டி அரசியல் குழுக்கள் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தான் இளைஞர்களின் இந்தப் பாராட்டு குறித்து இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கூறியதாவது:- பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி இந்தியஜென்-சி இளைஞர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஒரே கோரிக்கை, பாகிஸ்தான் எல்லை கடந்த பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுதான். இந்திய இளைஞர்களின் முதன்மையான கவலை பயங்கரவாதம் மட்டுமே என்பதை பாகிஸ்தான் ஜென்-சி தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/india-gen-z-youths-bold-protest-wins-praise-in-pakistan




