சென்னை, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு தாண்டி தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்களையும் நேசிக்கிறேன். மேலும் சினிமாவில் என் இப்போதைய சிந்தனை எல்லாமே நடிப்பில் மட்டும் தான். அதைத்தவிர என் மனதில் எதுவும் இல்லை யாரும் இல்லை. என்று கூறியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ரீலீலா, அசுர வேக ஆட்டக்காரரும் கூட. திரையில் இவரது நடிப்பை தாண்டி, வேகமான நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்து அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தனுசுக்கு ஜோடியாக 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 2 புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா மேலும் தனது திரையுலக பயணம் பற்றி கூறுகிறார். "தெலுங்கு தாண்டி தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை கொண்டாடுவதில் வல்லவர்கள். ஒரு பிரபலத்தை பிடித்துவிட்டால் அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டுவார்கள். அந்தவகையில் தெலுங்கு ரசிகர்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்களையும் நேசிக்கிறேன். இத்தகைய அன்பும், பாசமும் கொண்ட உறவுகள் கிடைப்பதால் சினிமாவில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். ஒவ்வொரு படமும் வெளியாகும் போது என்னைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வருவது வழக்கம். முன்பெல்லாம் வருத்தப்பட்டு அழுவேன். சோகமாக முடங்கி கிடப்பேன். இப்போது அதெல்லாம் இல்லை. பாராட்டையும், விமர்சனத்தையும் சரிசமமாக ஏற்கவும் தேவையற்றதை புறக்கணிக்கவும் கற்றுக்கொண்டு வருகிறேன். வித்தியாசமான கதைகளில் நடிக்க விருப்பம் என்னதான் காதல், கலகலப்பு என்று நடித்தாலும் அழுத்தமான சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும் நான் விரும்புகிறேன். அதுதான் என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்றும் நம்புகிறேன். நான் யாரிடமும் 'ஈகோ' பார்ப்பதில்லை எனக்கு இணையாக ஆட எந்த நடிகரும், நடிகையும் கிடையாது என நான் பெருமிதம் கொண்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. என்னிடம் அகந்தை என்பதே கிடையாது. நான் யாரிடமும் 'ஈகோ' பார்ப்பதில்லை. கெத்தும் காட்டுவதில்லை. எல்லோரையும் மதிப்பவள் நான். எனவே தேவையற்ற விஷயங்களை நம்ப வேண்டாம், அதனை பொருட்படுத்தவும் வேண்டாம். என் இப்போதைய சிந்தனை எல்லாமே நடிப்பில் மட்டும் தான். அதைத்தவிர என் மனதில் எதுவும் இல்லை. யாரும் இல்லை. என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dont-believe-that-information-sreeleelas-sensational-interview




