ஓணம் கொண்டாட்டத்தையொட்டி நடிகை அசின் பகிர்ந்த மகளின் அரிதான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. இயக்குநர் ஜீவாவின் "உள்ளம் கேட்குமே" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். அந்தப் படம் தாமதமாக, நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படம் முதலில் வெளியானது. பின்னர் அவர் நடித்த "கஜினி" படம் மிகப்பெரிய வெற்றிபெற்று அவரை தமிழின் முன்னணி நாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து விஜய்யுடன் "சிவகாசி", "போக்கிரி", "காவலன்", அஜித்துடன் "ஆழ்வார்", "வரலாறு", சூர்யாவுடன் "வேல்", கமலுடன் "தசாவதாரம்" உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு மகள் இருக்கிறார். கடந்த ஜனவரியில் அசின் தம்பதி 10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். திருமணத்துக்குப் பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகியுள்ளார். பொதுவெளியில் திரைப்பட விளம்பரங்களில் கலந்துகொள்வதிலும் தவிர்த்து வருகிறார். கடைசியாக தமிழில் ‘காவலன்’ படத்திலும் ‘ஆல் இஸ் வெல்’ என்ற இந்தி படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், மகளின் புகைப்படத்தை நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகை அசின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அசின் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சள் நிற ஆடையுடன் அசினின் மகள் பூக்களை அடுக்கும் காட்சிகள் கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-asins-daughters-onam-celebration-photos-go-viral




