சென்னை, அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனிசெயல்திட்டம் தொடங்கும் விதமாக “நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர்காலம்) திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு நீர் எழில் பள்ளித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் முதல்கட்டமாக சென்னையில் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர், போரூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-water-management-in-government-schools-minister-rajmohan-inaugurates-it




