சென்னை, தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு முதல்-அமைச்சர் விஜய் முதன்முறையாக வெளிநாடு பயணமாக இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு செல்கிறார். தொழில் முதலீடு தமிழக பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதை த.வெ.க. அரசு தனது இலக்காக அறிவித்துள்ளது. எனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க த.வெ.க. அரசு ஆரம்பகட்டத்தில் இருந்தே திட்டமிட்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. தென்கொரியா நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கார் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் சில புரிந்து ணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. முதலீடு, வேலை வாய்ப்பு அதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த ஆகஸ்டு 13-ந் தேதியன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு பல்வேறு நிறுவனங்களு டன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 110-க்கும் மேற்பட்ட நாட்களில் 104 நிறுவ னங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் வழியாக இந்த நிலையில், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் தலை மையிலான உயர்மட்டக் குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர். அதன் படி, இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து லண்டனுக்கு முதல்-அமைச்சர் விஜய் புறப்படுகிறார். துபாய் வழியாக அவர் லண்டன் செல்கிறார். அங்கு செப்டம்பர் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 17-ந் தேதி காலை 8 மணிக்கு துபாய் வழியாக சென்னை திரும்புகிறார். லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற் றும் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். முதல் வெளிநாட்டு பயணம் இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே லண்டன் சென்றுவிட்டனர். அமைச்சர் கீர்த்தனாவும் லண்டனுக்கு செல்கிறார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம் இதுவாகும். நேற்று முன்தினம்தான் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டு பயணத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் தயாராகியுள் ளார்.முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்காக, சென்னை விமான நிலையத்தில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிற மாநிலங்களுடன் போட்டி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டுக்கும் ஆந்திரா உள்ளிட்ட வேறு சில மாநிலங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களைவிட கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதில்தான் தொழில்து றையின் வெற்றி அமைந்துள்ளது. எனவேதான் புதிய முதலீடுகளை ஈர்ப்ப தற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-first-foreign-trip-leaves-for-london-tonight




