புதுடெல்லி, கைரோபிளேன் பிரிவில், டி.ஜி.சி.ஏ. விமானி உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான பயிற்சி பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- புதிய திட்டம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), கைரோபிளேன் (Gyroplane) எனப்படும் சிறு விமானங்களை இயக்குவதற்கான உரிமம் வழங்குவதற்கான பயிற்சி பாடத்திட்டம் என்ற தலைப்பில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. கைரோபிளேன் பிரிவில் டிஜிசிஏ விமானி உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான பயிற்சி பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வானூர்திகள் கைரோபிளேன்கள் என்பவை ஒரு தனித்துவமான வகை வானூர்திகளாகும். இவை, மேல்நோக்கிய விசையை உருவாக்க தடையின்றி சுழலும் ரோட்டார் அமைப்பைப் பயன்படுத்துகின்றன. அதே சமயம் முன்னோக்கிய உந்துவிசை ஒரு புரொப்பல்லர் மூலம் வழங்கப்படுகிறது. அவற்றை கேளிக்கை சவாரிகள், வான்வழி அனுபவப் பயணங்கள், விவசாயத்துக்கு மருந்து தெளித்தல், கண்காணிப்பு, கணக்கெடுப்புப் பணிகள் போன்ற வான்வழி வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். கைரோபிளேன் சிவில் விமானப் போக்குவரத்து விதியின் இந்த பிரகடனம், இந்தியாவில் கைரோபிளேன்களை அறிமுகப்படுத்துவதற்கும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் வழிவகுக்கும் ஒரு ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/training-curriculum-for-pilot-license-dgca-launches




