பெரும்பாவூர், வயநாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு ஷிகெல்லா நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டது. பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நடவடிக்கைகள் அதன் முடிவில், அந்த மாணவருக்கு ஷிகெல்லா நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதே கல்லூரியில் படிக்கும் மேலும் 3 மாணவர்களுக்கும் ஷிகெல்லா நோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வெளியே வசிப்பவர்கள். 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷிகெல்லா நோய் பரவலை தடுக்க, அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/shigella-infection-at-wayanad-government-engineering-college-4-students-quarantined




