சென்னை, டாஸ்மாக் முறைகேடு டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. செந்தில்பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தேஷ் ராஜ், சண்முகவேல், எஸ்.கார்த்திக் (எ) முலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. லுக் அவுட் நோட்டீஸ் ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகராக செயல்பட்டு, மதுபான பிராண்ட் அனுமதி, பார் உரிமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் செல்வாக்கு செலுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தலைமறைவாக ரத்தேஷ் ராஜூவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்கவும், இந்தியா வந்தால் கைது செய்யவும், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-for-ips-officers-brother




