சீர்காழி, உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டி சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பரிபூரண லோக ஷேம சப்ததச மகாயாகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் சப்ததச மேகா யாகம் நடத்தப்பட்டது. இதற்காக 18 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. யாகத்தின் நிறைவாக பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விவசாயம் செழிக்க வேண்டி. காவிரி கடைமடை பகுதியான டெல்டா பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை போக்கும் விதமாக மழைபெய்து காவிரியில் தண்ணீர் வத்து அதிகரித்து விவசாயம் செழிக்கவும், உலக நலன் வேண்டியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/saptadasa-maha-yagam-at-the-alancheri-agatheeswarar-temple




