பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக நீலம் புரடக்ஷன் மேலாளர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான ‘சார்பட்டா’ திரைப்படம் 2021-ல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் பெரிதும் கவனம் பெற்றன. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டுவந்தது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளும் சமீபத்தில் நடைபெற்று வந்தன. ‘ப்ரீக்வெல்’ கதையாக உருவாகும் ‘சார்பட்டா 2’ ‘சார்பட்டா 2’ திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட ‘ப்ரீக்வெல்’ கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 1940-50களின் சென்னை பின்னணி படத்தின் கதை 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் காலகட்டத்தின் குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு தொடக்கம் நீலம் புரடக்சன் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். அதில் காட்சி 1, நாள் 1, டேக் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-pa-ranjiths-sarpatta-2-film-shooting-begins




