சென்னை, சென்னையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூா் சிவசக்தி நகா் 4வது தெருவைச் சோ்ந்த நித்யராஜ் மகன் டேமியன் சுனில் (19). இவா் திருவொற்றியூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடல் அலையில் சிக்கி பலி இந்நிலையில், சுனில் நேற்று பலகைத்தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளார். கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலைகளில் சிக்கி சுனில் மாயமானார். இந்நிலையில், கடற்கரையில் சுனிலின் உடல் ஒதுங்கிக் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-college-student-dies-in-giant-wave




