திருவனந்தபுரம், பிரபல மலையாள நடிகர் தேவன். இவர் மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா, வாத்தியார், ஆதி, சிவகாசி போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். பாஜகவில் இருந்து விலகல் இதனிடையே, இவர் கேரளா மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2024ம் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த தேவன் நேற்று தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடினமான உழைத்தும் பாஜகவில் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறி அவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/popular-malayalam-actor-quits-bjp



