ஹனோய், ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தியர்கள் இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட 32 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் வியட்நாமின் ஹு கியுஹ் தீவுக்கு 35 பேர் இன்று காலை 11 மணியளவில் படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். படகு விபத்து படகில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய இந்தியவர்கள் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/boat-carrying-several-indian-tourists-capsizes-near-phu-quoc-island-in-vietnam




