வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 'தி ரெப்டைல் ஜூ' என்ற விலங்கு காப்பகத்தில், சுமார் 250 பவுண்டு (113 கிலோ) எடை கொண்ட ராட்சத முதலையை பெண் ஒருவர் தனது கை மற்றும் தோள்களில் குழந்தை போல சாதாரணமாக தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. யார் அந்த துணிச்சலான பெண்? அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பவுண்டன் வேலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெ ப்ரூவர். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'தி ரெப்டைல் ஜூ' என்ற வனவிலங்கு காப்பகத்தின் நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜூலியட் ப்ரூவர் அங்கேயே ஊர்வன விலங்கு நிபுணராகப் பணியாற்றி வருகிறார். 'டார்த்' என்று பெயரிடப்பட்ட ராட்சத முதலையை, அது சிறிய குட்டியாக இருந்ததிலிருந்தே ஜூலியட் வளர்த்து வந்துள்ளார். முதலையை குழந்தை போல தூக்கிய பெண் பல வருடங்களாகத் தொடர்ந்து பராமரித்து வருவதால், அந்த முதலைக்கும் ஜூலியட்டிற்கும் இடையே ஒரு அசாத்தியமான நட்புப் பிணைப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே, பார்ப்பவர்களை அதிரவைக்கும் அந்த ராட்சத முதலையை அவர் எவ்வித பயமுமின்றி நேசத்துடன் கை மற்றும் தோள்களில் குழந்தை போல சாதாரணமாக தூக்கிச் சென்றுள்ளார். வீடியோ வைரல் இந்த வீடியோ இணையத்தில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், "விலங்குகள் எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்று கூற முடியாது, எனவே எவ்வளவு பழகியிருந்தாலும் இது போன்ற ஆபத்தான விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/woman-effortlessly-slings-113-kg-crocodile-over-her-shoulder-viral-video




