வாஷிங்டன், மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்(எம்.சி.யு.) வரிசையில் வரும் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களில், பீட்டர் பார்க்கரின் நண்பன் நெட் லீட்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஜேகப் பேட்டலான். சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக ‘ஸ்பைடர் மேன்' படத்தின் புரமோஷன் பணிகளுக்காக அந்த படத்தின் நடிகர், நடிகைகள் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினர். அப்போது ஒரு பேட்டியில், ஜேகப் பேட்டலான் நகைச்சுவையாக, ‘எனது மனைவி என்னை பெரிய நாய்க்குட்டி என்று கூப்பிடுவார்’ என்றார். 29 வயதான நடிகர் ஜேகப் பேட்டலானுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், அவர் தனது மனைவி குறித்து பேசியது நெட்டிசன்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டது. இதையடுத்து இணையதளவாசிகள் ஜேகப் பேட்டலானின் திருமணம் குறித்த தகவல்களை தேடிக் கண்டறிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். அவர் இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்த தனது திருமணம் குறித்த தகவல், அவரது வாயாலேயே வெளியே வந்துவிட்டது. முன்னதாக கடந்த 2025-ம் ஆண்டு ஜேக்கப் பேட்டலானுக்கும், வெரோனிக்கா லீஹோவ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அதன் பிறகு அவர்களது திருமணம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, ஜேக்கப்-வெரோனிக்கா ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன்பு பிரான்சில் திருமணம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் 2019-ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். மால்டோவா நாட்டை சேர்ந்த வெரோனிக்கா, அமெரிக்காவில் குடியேறி தற்போது இண்டீரியர் டிசைனராக பணியாற்றி வருகிறார். திருமணம் குறித்த தகவல் வெளியான பிறகு, தற்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதே போல், ‘ஸ்பைடர் மேன்’ படத்தில் பீட்டர் பார்க்கர்-மேரி ஜேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா ஜோடியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கும் இதே போல் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் திருமணம் குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/spider-man-actor-ties-the-knot-with-longtime-girlfriend




