சென்னை, சென்னை பெண் போலீஸ் ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை காதலித்து கற்பையும் பறிகொடுத்து கரு வையும் சுமந்து தற்போது அந்த போலீஸ்காரர் மீது பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார். ஆயுதப்படை பெண் போலீஸ் அந்த பெண் போலீசின் கண்ணீர் கதை வருமாறு:- திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் போலீஸ் 24 வயது நிரம்பியவர். பட்டதாரி. சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளார். புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் தன்னுடன் ஆயுதப்படையில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர்.போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அந்த பெண் போலீசுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி உள்ளார். பெண் போலீசும் தனக்கு கணவராகப் போகிறார் என்ற எண்ணத்தில் அவரது இச்சைக்கு இணங்கி வந்துள்ளார். கர்ப்பம் கடந்த 3 ஆண்டுகளாக இவர்களின் காதல் வாழ்க்கை உல்லாசமாக கடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ்காரர் வீட்டில் அவரது பெற்றோர் இந்த காதலை ஆதரித்து திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கிடையே போலீஸ்காரருடன் வாழ்ந்த உல்லாச வாழ்க் கையால் பெண் போலீஸ் கர்ப்பமாகி இருந்தார். அந்த கருவை கலைக்க சொல்லி தனியார் ஆஸ்பத்திரியில் பெண் போலீசை சிகிச்சைக்கு சேர்த்ததாக தெரிகிறது. அதனால் கரு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ்காரர் பெண் போலீசை திடீரென்று திருமணம் செய்ய மறுத்தார். அவருடனான தொடர்பையும் துண்டித்தார். விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. பரபரப்பு புகார் இந்த நிலையில் தனது வாழ்க்கையை சீரழித்தவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட பெண் போலீஸ் எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் காரரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இது போன்ற பெண் போலீஸ் ஒருவரின் புகார் மனு மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது புகார் கொடுத்துள்ள பெண் போலீசின் கண்ணீர் கதையும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/lost-her-chastity-to-a-policeman-and-bore-his-child-the-tearful-story-of-a-chennai-policewoman




